கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
கெங்கவல்லி:
ஆத்தூர் அருகே உள்ள கடம்பூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ராஷித் (வயது 22). இவர் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். பெத்தநாயக்கன்பாளையம் தும்பல் பகுதியை சேர்ந்த நவ்ஷத் என்பவரின் மகள் ரூபிகா பானு (23). இவர் பி.ஏ. ஆங்கிலம் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருடைய தோழி ராதிகாவின் தம்பி ராஷித். இதன் காரணமாக ராஷித்துக்கும், ரூபிகா பானுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ராஷித், ரூபிகா பானு ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி, கெங்கவல்லி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருவரின் வீட்டாரையும் அழைத்து சமாதானம் பேசினர். பின்னர் ரூபிகா பானுவை, அவரது காதல் கணவர் ராஷித்துடன் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story