கபிலர்மலை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி - மற்றொருவர் படுகாயம்


கபிலர்மலை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி - மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 10 Aug 2021 8:12 AM IST (Updated: 10 Aug 2021 8:48 AM IST)
t-max-icont-min-icon

கபிலர்மலை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

பரமத்திவேலூர்,

பரமத்தி அருகே உள்ள ஜங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வீராசாமி (53) கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கபிலர்மலை அருகே உள்ள சிறுகிணற்றுபாளையத்திற்கு சென்று விட்டு மீண்டும் ஜங்கமநாயக்கன்பட்டிக்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். 

அப்போது கபிலர்மலை அருகே சிறுகிணற்றுபாளையம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள்‌ வீராசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வீராசாமியும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஓலப்பாளையத்தை சேர்ந்த பாலுசாமி (45) என்பவரும் படுகாயம் அடைந்தனர். 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் வீராசாமி நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

பாலுசாமிக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Next Story