வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வழங்க கோரி சமூக இடைவெளியின்றி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்


வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வழங்க கோரி சமூக இடைவெளியின்றி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 10 Aug 2021 11:36 AM IST (Updated: 10 Aug 2021 11:36 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வழங்க கோரி சமூக இடைவெளியின்றி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் கீழ்க்கதிர்ப்பூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இவற்றில் அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்கள் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகிறது.

அரசு சார்பில் மானியம் மற்றும் கடன் உதவியோடும் வழங்கப்படும் இந்த வீடுகளைப் பெறுவதற்காக காஞ்சீபுரம் நகர பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் முயன்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் திரண்ட பொதுமக்கள் குடியிருக்க வீடு வழங்க கோரி கோரிக்கை மனு அளித்தனர். இதற்கிடையே கொரோனா அச்சமின்றி சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் முண்டியடித்து கொண்டு மனுக்களை கொடுக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் சிறிது நேரம் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. மனு கொடுக்க வந்தவர்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

Next Story