பஞ்சை வயிற்றுக்குள் வைத்து தைத்துவிட்டதாக பரபரப்பு புகார் - கமிஷனர் அலுவலகத்தில் பெண் மனு
சென்னை வியாசர்பாடியைச சேர்ந்தவர் நீலவேணி (வயது 46). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த பரபரப்பு புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
சென்னை,
எனக்கு கர்ப்ப பையில் கட்டி இருப்பதாக கூறி பெரம்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆபரேஷன் செய்தனர். அப்போது அவர்களின் கவனக்குறைவு காரணமாக வயிற்றில் பஞ்சை வைத்து தைத்துவிட்டனர். இதனால் நான் கடுமையான கஷ்டத்தை சந்தித்தேன். தற்போது மீண்டும் அதன் தொடர்ச்சியாக 2 முறை ஆபரேஷன் செய்துள்ளனர். இது போன்ற தவறை செய்த டாக்டர்கள் மீதும், அந்த ஆஸ்பத்திரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story