திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,689-க்கு ஏலம்


திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,689-க்கு ஏலம்
x
தினத்தந்தி 10 Aug 2021 6:49 PM IST (Updated: 10 Aug 2021 6:49 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,689-க்கு ஏலம் போனது.

திருவாரூர்:-

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,689-க்கு ஏலம் போனது.

பருத்தி சாகுபடி

திருவாரூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. தற்போது பருத்தி அறுவடை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பருத்தியை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் விழுப்புரம், பண்ருட்டி, செம்பனார்கோவில், தேனி, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டில் எழுதி ஏலப்பெட்டியில் போட்டனர்.

அதிகபட்ச விலை

திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில் கண்காணிப்பாளர் செந்தில்முருகன், மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டி திறக்கப்பட்டு வியாபாரிகள் கேட்ட விலை படிக்கப்பட்டது.
இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து 689-க்கு ஏலம் போனது. குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 479, சராசரியாக ரூ.7 ஆயிரத்து 500-க்கு பருத்தி ஏலம் போனது. இந்த ஏலத்தில் 1,524 குவிண்டால் பருத்தி விற்பனையானது.

Next Story