விளாத்திகுளம் முத்துமாரியம்மன் கோவிலில் நகை திருட்டு
விளாத்திகுளம் முத்துமாரியம்மன் கோவிலில் நகை திருடப்பட்டது
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் மீரான் பாளையம் தெருவில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் பூசாரி முத்துமாரி நேற்று முன்தினம் வழக்கம் போல் பூஜைகளை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றார். நேற்று காலையில் இவர் கோவிலுக்கு வந்தபோது, நடை திறந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கோவிலுக்குள் சென்றபோது, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த 5½ பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story