கம்பத்தில் தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல்
கம்பத்தில் தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கம்பம்:
கம்பம் பகுதியில் இயக்கப்படும் தனியார் பஸ் மற்றும் லாரிகளில் அதிக ஒலி எழுப்பும் ‘ஏர் ஹாரன்’களை விதியை மீறி பொருத்தி, பொதுமக்களை மிரள வைக்கும் வகையில் ஒலி எழுப்பி வருகின்றனர். இதனால் பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக ஒலி எழுப்பும் ‘ஏர் ஹாரன்’களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று கம்பம் பழைய பஸ் நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் மனோகரன் மற்றும் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானபண்டித நேரு ஆகியோர் தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தனியார் பஸ் மற்றும் லாரிகளில் போக்குவரத்து விதிகளை மீறி பொருத்தப்பட்டிருந்த ‘ஏர் ஹாரன்கள்’ பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விதியை மீறி வாகனங்களில் ‘ஏர் ஹாரன்’ பொருத்தப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்தார்.
Related Tags :
Next Story