வால்பாறையில் வங்கிகளில் கூட்ட நெரிசல்


வால்பாறையில் வங்கிகளில் கூட்ட நெரிசல்
x
வால்பாறையில் வங்கிகளில் கூட்ட நெரிசல்
தினத்தந்தி 10 Aug 2021 10:08 PM IST (Updated: 10 Aug 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் வங்கிகளில் கூட்ட நெரிசல்

வால்பாறை

வால்பாறை வட்டார பகுதியில் ஏராளமான தேயிலை தோட்ட நிறுவனங்கள் உள்ளன. இங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு மாதந்தோறும் 7-ந் தேதி சம்பளம் வங்கி கணக்கிற்கு செலுத்தப் படுகிறது. 

எனவே தொழிலாளர்கள் தங்கள் சம்பள பணத்தை எடுப்பதற் காக மாதந்தோறும் 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வங்கிகள் முன்பு குவிகிறார்கள். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

தற்போது கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் கூட்டம்கூடுவதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வால்பாறையில் இந்த 3 நாட்களிலும் வங்கிகளில் அதிகளவில் கூட்டம் இருப்பதால், கொரோனா பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது. 

எனவே இந்த 3 நாட்களில் மட்டும் வங்கிகளில் கூட்டம் கூடுவதை தடுக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது


ஒவ்வொரு மாதமும் இந்த நாட்களில் நடமாடும் ஏ.டி.எம். வாகனங்கள், கூடுதல் கவுண்ட்டர்களை திறந்தால் கூட்டமாக கூடுவதை தவிர்க்கலாம். 
அத்துடன் கொரோனா பரவுவதையும் தடுக்க முடியும். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், தாசில்தார் மற்றும் அதிகாரிகள் வங்கி நிர்வாகிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story