அடுத்தடுத்து கார், லாரி மோதிய விபத்தில் சலூன் கடைக்காரர் சாவு
அடுத்தடுத்து கார், லாரி மோதிய விபத்தில் சலூன் கடைக்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாகூர், ஆக.
தவளக்குப்பம் வி.ஐ.பி. நகர் நடேசன் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் என்ற ரத்தினம் (வயது 38). சலூன் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை இவர், கடலூர்- புதுச்சேரி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார், லாரி அடுத்தடுத்து அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற கார், லாரி குறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story