சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை


சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 10 Aug 2021 10:16 PM IST (Updated: 10 Aug 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

டியூசனுக்கு வந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

புதுச்சேரி, ஆக.
டியூசனுக்கு வந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சிறுமி பலாத்காரம்
புதுச்சேரி சண்முகாபுரம், தெற்கு பாரதிபுரம் நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 27).   இவர்   கடந்த 2016-ம் ஆண்டு தன்னிடம் டியூசன் படிக்க வந்த 15 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி  பலமுறை  பாலியல் பாலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர்   மேட்டுப் பாளையம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
10 ஆண்டு சிறை
இதுதொடர்பான வழக்கு புதுச்சேரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு கூறினார். 
இதில் குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சித்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story