பென்னாகரம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பென்னாகரம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Aug 2021 10:26 PM IST (Updated: 10 Aug 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பன்னாகனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம், விவசாயி. இவரது மனைவி தீபா (வயது 25). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அவந்திகா (7) என்ற மகள் உள்ளாள். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 8-ந் தேதி தீபா கம்ப்யூட்டர் வகுப்புக்கு செல்வதாக கணவரிடம் கேட்டுள்ளார். இதற்கு சிதம்பரம் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த தீபா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தீபாவின் தாயார் சாலம்மாள் பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story