ஜோலார்பேட்டை ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் குளம்போல் தேங்கிய மழைநீர்


ஜோலார்பேட்டை  ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் குளம்போல் தேங்கிய மழைநீர்
x
தினத்தந்தி 10 Aug 2021 10:26 PM IST (Updated: 10 Aug 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் குளம்போல் தேங்கிய மழைநீர்

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் மற்றும் பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை 2 மணி முதல் பலத்த கனமழை பெய்தது. இதனால் ஜோலார்பேட்டையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சின்னகோடியூர் ஏரி நிரம்பியது. புது ஓட்டல் தெருவில் சுமார் 3 அடிக்கு மழை நீர் குளம் போல் தேங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் ராமஜெயம் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டார்.

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 5 பிளாட்பாரங்கள் உள்ளன. கன மழை காரணமாக 3 மற்றும் 4-வது பிளாட்பாரத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அதிகாலை 4.55 மணிக்கு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லவேண்டிய ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 5.45 மணியளவில் புறப்பட்டு சென்றது. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Next Story