உடுமலை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர சிறப்பு பூஜை
உடுமலை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர சிறப்பு பூஜை
உடுமலை, ஆக.11-
உடுமலை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரம் விழா நேற்று நடந்தது.விழாவையொட்டி மாரியம்மனுக்கு 16 வகை அபிஷேகம், சவுபாக்கிய திரவியங்கள் சமர்ப்பணம், சிறப்பு பூஜை ஆகியவை நடந்தன. கோவில் வளாகத்தில் மாரியம்மன் சன்னதி முன்பு 9 பெண் குழந்தைகள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டு, அவர்களுக்கு பட்டுப்பாவாடை மற்றும் ஆடைகள் வழங்கப்பட்டு கன்னிகா பூஜை மற்றும் பாத பூஜை நடந்தது.
இதைத்தொடர்ந்து நடந்த சுமங்கலி பூஜையில் 9 பெண்களுக்கு பட்டுப்புடவை, ஆடைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அவர்கள் வரிசையாக உட்காரவைக்கப்பட்டு சுமங்கலி பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அந்த பெண்களிடம் பக்தர்கள் ஆசிபெற்றனர். ஆடிப்பூரம் சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஶ்ரீதர், செயல்அலுவவர் வி.பி.சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story