தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்


தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 10 Aug 2021 10:37 PM IST (Updated: 10 Aug 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.

கொடைக்கானல்: 

கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. பொதுமக்களும் யானைகளின் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். 

அதன்படி பேத்துப்பாறையை அடுத்த வெள்ளைப்பாறை பகுதியில் சலேத்நாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தின் இரும்பு கேட்டை உடைத்து 2 யானைகள் உள்ளே புகுந்தன. பின்னர் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியதோடு, அங்கு அமைக்கப்பட்டிருந்த மின் வேலியையும் நாசப்படுத்தின. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே குடியிருப்பு மற்றும் தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் புகுவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story