சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்வது தொடர்பான பயிற்சி வகுப்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்வது தொடர்பான பயிற்சி வகுப்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்வது தொடர்பான பயிற்சி வகுப்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விபத்தை குறைக்க நடவடிக்கை
திருப்பூர் மாநகர பகுதியில் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் ஒருங்கிணைந்த சாலை விபத்து தகவல் சேகரிப்பு செல்போன் செயலி ஏற்கனவே காவல்துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாநகர பகுதியில் உள்ள 8 போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் இந்த செயலியை பயன்படுத்தி விபத்து நடந்த இடத்துக்கு சென்று, விபத்து நடந்த இட விவரம், விபத்தில் காயமடைந்தவர் விவரம், விபத்தில் சிக்கிய வாகனங்கள், காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள், விபத்துக்கான காரணம் உள்ளிட்ட விவரங்களை புகைப்படமாக இந்த செயலில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.
இதுபோல் வட்டார போக்குவரத்து துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், மருத்துவ துறையினர் ஆகியோரும் விபத்து நடந்த இடத்துக்கு சென்று இந்த செயலியில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். இதன் மூலமாக விபத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து தகவல் சேகரிப்பட்டு அந்த விவரங்களை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கும்போது, விபத்தை தடுக்கும் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.
பயிற்சி வகுப்பு
இந்த செயலியை மேம்பாடு செய்து அதுதொடர்பாக அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. தேசிய தகவலியல் துறை அதிகாரிகள் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள். இதில் போலீசார், வட்டார போக்குவரத்து துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், மருத்துவ துறையினர் பங்கேற்றார்கள்.
Related Tags :
Next Story