ஊத்துக்குளி கல் குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு
ஊத்துக்குளி கல் குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு
ஊத்துக்குளி:
ஊத்துக்குளி தாலுகாவிற்கு உட்பட்ட, மொரட்டுபாளையம் ஊராட்சி, பெரியபாளையம் ஊராட்சி, கவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிக அளவில் கல்குவாரிகள் உள்ளன.இங்கு அளவுக்கு அதிகமாக கனிம வளம் எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் சகோதரர்கள் இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை தொடர்பாக கல் குவாரிகளை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் ஆர்.டி.ஓ.ஜெகநாதன், ஊத்துக்குளி தாசில்தார் ஜெகதீஷ் குமார், நில வருவாய் ஆய்வாளர் வேலுமணி, மற்றும் வருவாய் துறையினர் ஊத்துக்குளி பகுதியில் கடந்த 2 நாட்களாக 20-க்கும் மேற்பட்ட கல் குவாரிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கனிமவளம் எடுக்கப்படுகின்றதா, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கல் குவாரிகள் செயல்படுகின்றனவா என ஆய்வு செய்த அவர்கள் இது குறித்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் சமர்ப்பிப்பார்கள் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story