ஆற்றின் கரையோரத்தில் கிடந்த முதலையால் பரபரப்பு
ஆற்றின் கரையோரத்தில் கிடந்த முதலையால் பரபரப்பு
பந்தலூர்
பந்தலூர் தாலுகா மாங்கம்வயல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள பெரிய ஆறு ஓடுகிறது.
மாங்கம்வயல் பகுதியில் உள்ள பாலத்தின் அருகே பொதுமக்கள் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்து சிறிது தூரத்தில், ஆற்றின் கரையோரத்தில் முதலை படுத்து கிடந்தது.
இதனைக்கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். பின்னர் அந்த முதலை ஆற்றுக்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அத்திகுன்னா ஆற்றில் முதலை கிடந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story