ரேஷன் பொருட்கள் வழங்க மறுப்பு மூதாட்டிகள் புகார்
ரேஷன் பொருட்கள் வழங்க மறுப்பு மூதாட்டிகள் புகார்
திருப்பூர்,
திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்துக்கு நேற்று காலை மூதாட்டிகள் வந்து தங்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க மறுப்பதாக குடிமைப்பொருள் தனி தாசில்தார் அலுவலகத்தில் முறையிட்டனர். பாயிண்ட் ஆப் சேல்ஸ் எந்திரத்தில் கைரேகையை பதிவு செய்து அதன்பிறகு சம்பந்தப்பட்ட கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மூதாட்டிகளுக்கு கைரேகை பதிவாகாததால் ரேஷன் பொருட்களை ஊழியர்கள் வழங்க மறுத்ததாக தெரிகிறது. ஏழ்மை நிலையில் உள்ள தங்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கைரேகை பதிவாகாத மூதாட்டிகளுக்கு அவர்களின் ஆதார் அட்டையை பதிவு செய்து ரேஷன் பொருட்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூதாட்டிகளை அலைக்கழிக்காமல் ரேஷன் பொருட்களை வழங்கவும் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றனர்.
Related Tags :
Next Story