ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய மேல்மாங்குப்பம் ஏரி
ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய மேல்மாங்குப்பம் ஏரி
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் தாலுகா மேல்மாயில் பஞ்சாயத்துக்கு உட்பட்டது மேல்மாங்குப்பம் ஏரி. இது மேல்மாயில் ஒட்டிய கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரியில் நீர் வரத்துக்கால்வாய், நீர் பாசனக்கால்வாய், நீர் சேமிப்புப் பகுதிகள், மதகுக் கால்வாய், கோடி கால்வாய், வேப்பநேரிக்குச் செல்லும் கால்வாய் என எல்லாப் பகுதிகளிலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. சிலர் ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளால் மழை நீர் முறையாக சேமிக்கப்படாமல் வீணாகி வருகிறது. இதன் காரணமாக கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி குடிநீர் பஞ்சத்தை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட கலெக்டர், கே.வி.குப்பம் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
Related Tags :
Next Story