அரக்கோணம் அருகே மதுபோதையில் விஷம் குடித்து பெண் சாவு


அரக்கோணம் அருகே மதுபோதையில் விஷம் குடித்து பெண் சாவு
x
தினத்தந்தி 10 Aug 2021 11:09 PM IST (Updated: 10 Aug 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

மதுபோதையில் விஷம் குடித்து பெண் சாவு

அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கணபதிபுரம் பகுதியை ேசர்ந்தவர் வேலு. இவரது மனைவி கவுரி (வயது 30). மதுபழக்கம் உடையவரான இவர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் பூச்சி மருந்து குடித்துள்ளார். 

இதனையடுத்து அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து தக்கோலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story