நகராட்சி நுழைவு வாயிலை மூடி ஊழியர்கள் போராட்டம்


நகராட்சி நுழைவு வாயிலை மூடி ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2021 11:11 PM IST (Updated: 10 Aug 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

நகராட்சி நுழைவு வாயிலை மூடி ஊழியர்கள் போராட்டம்

ஊட்டி

சம்பளம் கேட்டு நகராட்சி நுழைவு வாயிலை மூடி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஒப்பந்த ஊழியர்கள் 

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்பாக வீடு வீடாக சென்று விவரங்களை சேகரிக்கவும், காய்ச்சல், சளி அறிகுறி உள்ளவர்களை கண்டறியவும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். 

அதுபோன்று ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட 200 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

நுழைவு வாயிலை மூடி போராட்டம் 

இதில் 150 பேர் ஊட்டி நகர பகுதியில் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். ஆனால் அவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில்  ஒப்பந்த பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென்று நகராட்சி நுழைவு வாயிலை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு வந்த ஆணையாளரின் வாகனமும் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

போலீசார் பேச்சுவார்த்தை 

இது குறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story