வெண்ணந்தூரில் கனமழை: விவசாய நிலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது


வெண்ணந்தூரில் கனமழை: விவசாய நிலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது
x
தினத்தந்தி 10 Aug 2021 11:16 PM IST (Updated: 10 Aug 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

வெண்ணந்தூரில் பெய்த கனமழை காரணமாக விவசாய நிலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது.

வெண்ணந்தூர்:
கனமழை
வெண்ணந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் மதிய வேளைகளில் வெளியில் சென்று வர சிரமப்பட்டு வந்தனர். நேற்று காலையும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. வெப்பக்காற்றும் வீசியது.
இந்தநிலையில் மாலை 3 மணி அளவில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. தொடக்கத்தில் மிதமாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக மாறியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தண்ணீர் தேங்கியது
மேலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் சற்று சிரமத்திற்கு ஆளானார்கள். திடீரென பெய்த மழையால் வெண்ணந்தூர், அலவாய்ப்பட்டி, மாட்டுவேலம்பட்டி, அத்தனூர், நடுப்பட்டி, தொட்டிப்பட்டி, அக்கரைப்பட்டி, மதியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விளை நிலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. 
தற்போது உழவு பணியை தொடங்கி உள்ள விவசாயிகள் இந்த கனமழையால் மகிழ்ச்சி அடைந்தனர். சுமார் அரை மணி நேரம் நீடித்த கனமழை, அதன் பின்பு தூறலாக மாறியது. இந்த திடீர் மழையால் இரவில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Next Story