காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2021 11:33 PM IST (Updated: 10 Aug 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து அருப்புக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். நகர தலைவர் லட்சுமணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் உலக்குடி செல்வம் கலந்து கொண்டார்.  ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெயர் மாற்றம் செய்யக்கூடாது எனவும், மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.சி. துறைத்தலைவர் ஜோதிமணி, சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story