ஒரேநாளில் 25 பேரை கடித்த நாய்
அருப்புக்கோட்டையில் நேற்று ஒரேநாளில் 25 பேரை நாய் கடித்தது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் நேற்று ஒரேநாளில் 25 பேரை நாய் கடித்தது.
நாய்கள் தொல்லை
அருப்புக்கோட்டை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் ெபரிதும் சிரமப்பட்டு வந்தனர்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தும் படி நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் அளித்த வண்ணம் இருந்தனர். இந்தநிலையில் நேற்று அருப்புக்கோட்டையில் பழைய பஸ்நிலையம் பகுதியில் நின்று ெகாண்டு இருந்த சிலரை ஒரு நாய் கடித்தது.
பின்னர் அந்த நாய் தொடர்ந்து புதிய பஸ் நிலையம், மணி நகரம், பஜார் பகுதி, முஸ்லிம் தெரு ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்குள்ள நின்று கொண்டு இருந்தவர்களை கடித்து குதறியது.
25 பேர் காயம்
இவ்வாறு ஒரேநாளில் அடுத்தடுத்த பகுதிகளில் நின்று கொண்டு இருந்த சிறுவர், சிறுமிகள், பெண்கள், ஆண்கள் என அனைவரையும் கடித்து விட்டு அங்கிருந்து நாய் ஓடி விட்டது.
இதில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாத வண்ணம் உடனே நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரேநாளில் 25 பேரை நாய் கடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story