ஏர்வாடி அருகே ஒரே குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா; சுகாதார பணிகள் தீவிரம்


ஏர்வாடி அருகே ஒரே குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா; சுகாதார பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 10 Aug 2021 7:06 PM GMT (Updated: 10 Aug 2021 7:06 PM GMT)

ஏர்வாடி அருகே ஒரே குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

ஏர்வாடி:
சிங்கப்பூரில் இருந்து ஏர்வாடி திரும்பிய ஒரே குடும்பத்ைத சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

4 பேருக்கு கொரோனா 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது. ேமலும், கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்கவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  
இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஏர்வாடி திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்

சிங்கப்பூரில் இருந்து ஏர்வாடி அருகே உள்ள சொந்த ஊரான டோனாவூருக்கு ஒரு தாயும், அவருடைய 3 குழந்தைகளும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. 
இதையடுத்து அவர்கள் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் தாய், 3 குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

சுகாதார பணிகள்
 
ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் டோனாவூர் பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு கிருமி நாசினி மற்றும் பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது. 
ேமலும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம் அமைத்து கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெருவுக்கு ‘சீல்’ வைப்பு

திசையன்விளை அருகே உள்ள குமாரபுரத்தில் சமீபத்தில் ஒரே குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் வசிக்கும் தெருவுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story