மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
ஆர்ப்பாட்டம்
கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், ராஜாமுகமது, கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- மணல் மாட்டுவண்டி குவாரிகளை திறக்காததால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மாடுகள் உணவின்றி சாவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
கட்டிட பணிக்கான மணல் தட்டுப்பாட்டை போக்கிட வேண்டும். மணல் வண்டி குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story