குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு


குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 11 Aug 2021 1:12 AM IST (Updated: 11 Aug 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நெல்லை:
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் நயினார் காலனியை சேர்ந்த வேல்முருகன் என்ற ராக்கி என்பவரின் மகன் சிவா என்ற ராக்கி சிவா (வயது 25). இவர் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரையை ஏற்று சிவாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இதையடுத்து வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் நேற்று சிவாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தார்.
பாளையங்கோட்டை சீவலப்பேரி அருகே உள்ள மேட்டுக்குப்பகுறிச்சி பகுதியை சேர்ந்த ராமையா என்பவரின் மகன் சுரேஷ் (36). இவர் போக்சோ வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவரை, கலெக்டர் உத்தரவுப்படி நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரசிதா நேற்று குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

Next Story