கிராம மக்கள் சாலை மறியல்


கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Aug 2021 1:12 AM IST (Updated: 11 Aug 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து காளையார்கோவிலில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே போரடப்பு கிராமத்தை சேர்ந்தவர் மரியதாஸ் (வயது 50). இவர் காளையார்கோவில் கிருஷ்ணா நகர் பகுதியில் ஒரு மனை இடத்தை வாங்கி பத்திர பதிவு செய்து பட்டா மாற்றி உள்ளார். அந்த இடத்தை அனுபவிக்க முயற்சி செய்யும்போது சிலையாஊரணி கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு சொந்தமான கண்மாய்க்கு வரும் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்துள்ளதாக கூறி தடுத்தனர். இதையடுத்து மரியதாஸ் மதுரை ஐகோர்ட்டில் தனது இடத்தை மீட்டு ஒப்படைக்கும்படி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஐகோர்ட்டு பட்டாதாரர் கூறிய நிலத்தை அளவை செய்து அவரது நிலத்தை எடுத்துக் கொடுக்கும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டது‌. இதனையடுத்து காளையார்கோவில் தாசில்தார் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா, காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் சரவணன், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாஸ்கரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று நில அளவை செய்து மனை இடத்தின் ஒரு பகுதியில் நீர்வரத்து கால்வாய் செல்லும்படி சிமெண்ட் பைப் மூலம் வழித்தடம் அமைத்துவிட்டு மீதி நிலத்தை ஒப்படைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலையாஊரணி கிராம மக்கள் காளையார்கோவில் - கல்லல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.


Next Story