உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த உறவினர்கள் மீது வழக்கு
உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பேரையூர்,ஆக.
வில்லூர் அருகே உள்ள தென்னமநல்லூரைச் சேர்ந்தவர் சீராளன். இவர் கடந்த சில வருடங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். ஆனால் அவரது உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்து விட்டனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜவகர் வில்லூர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் சீராளனின் உறவினர்களான கருப்பாயி, பாண்டியம்மாள், தங்கமாரி, முருகேசன், கந்தசாமி, முத்துப்பாண்டி ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story