4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 11 Aug 2021 1:43 AM IST (Updated: 11 Aug 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கூறினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கூறினார்.

4 லட்சம் பேர்

இது தொடர்பாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி, விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன் கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
இந்த மாவட்டத்தில் 48 கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் தினமும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதுவரை 4 லட்சத்து 5 ஆயிரத்து 100 பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு உள்ளனர்.
இதில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 211 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 56 ஆயிரத்து 889 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

தடுப்பூசி முகாம்

 இதில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் 1 லட்சத்து 61 ஆயிரத்து 285 பேருக்கும், 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் 1 லட்சத்து 72 ஆயிரத்து 687 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
எனவே 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
 இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story