6 பேருக்கு கொரோனா தொற்று
6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 569 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 235 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 109 பேரில் 14 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 225 பேர் பலியாகி உள்ளனர். நேற்றைய அறிவிப்பின்படி கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.
Related Tags :
Next Story