ரூ.65 லட்சத்தில் மக்கும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்
சிவகங்கை அருகே ஊராட்சியின் மூலமாக மக்கும் குப்பைகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஆலையை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்துவைத்தார்.
சிவகங்கை,
சிவகங்கை அருகே ஊராட்சியின் மூலமாக மக்கும் குப்பைகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஆலையை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்துவைத்தார்.
மின்சாரம் தயாரிக்கும் ஆலை
விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை திறந்து வைத்து பேசியதாவது:-
200 யூனிட் மின்சாரம்
இங்கு ஒரு நாளைக்கு 2 டன் வரை குப்பைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து ஊராட்சியில் தெருவிளக்குகளுக்கு மின் சப்ளை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் ஒருநாளைக்கு 200 யூனிட் வரை மின்சாரம் தயாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மானாமதுரை தொகுதி தமிழரசி எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரெத்தினவேலு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story