பெண் கடத்தி கற்பழிப்பு; 2 வாலிபர்கள் கைது


பெண் கடத்தி கற்பழிப்பு; 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 11 Aug 2021 1:53 AM IST (Updated: 11 Aug 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

யாதகிரி அருகே கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண்ணை கடத்தி கற்பழித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

யாதகிரி:

கடத்தி கற்பழிப்பு

  யாதகிரி மாவட்டம் சுராப்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் 45 வயது பெண். இவர் கடந்த 8-ந் தேதி இரவு தனது உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.

  இந்த சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளை ஒரு ஆட்டோ பின்தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது. ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மோட்டார் சைக்கிளை, ஆட்டோவில் வந்த 2 பேர் மறித்தனர். பின்னர் அவர்கள் பெண்ணின் உறவினரை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றனர். பின்னர் ஓடும் ஆட்டோவில் வைத்தே பெண்ணை 2 பேரும் மாறி, மாறி கற்பழித்து உள்ளதாக தெரிகிறது. இதன்பின்னர் பெண்ணை சாலையில் இறங்கிவிட்டு 2 பேரும் தப்பி சென்று விட்டனர்.

2 வாலிபர்கள் கைது

  பின்னர் பெண்ணை உறவினர் மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்த சம்பவம் குறித்து சகாப்புரா போலீஸ் நிலையத்தில் பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

  இந்த நிலையில் பெண்ணை கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர்கள் ராஜூ (வயது 21), வீரேஷ் (25) என்பதும், 2 பேரும் குடிபோதையில் பெண்ணை கடத்தி கற்பழித்ததும் தெரிந்தது. கைதான 2 பேர் மீதும் சகாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story