இளம்பெண் மர்ம சாவு குறித்து போலீசார் விசாரணை


இளம்பெண் மர்ம சாவு குறித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Aug 2021 2:10 AM IST (Updated: 11 Aug 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் மர்ம சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கறம்பக்குடி
கறம்பக்குடி அருகே உள்ள கலியரான் விடுதி தொண்டைமான் புஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மோனிஷா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. மோனிஷா கர்ப்பமாக இருந்தார். இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி மோனிஷா இறந்து விட்டார். அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்து விட்டனர். இதனிடையே மோனிஷா சாவில் சந்தேகம் இருப்பதால் இறப்பிற்கான காரணத்தை அறிய வேண்டும் என்று கலியரான் விடுதி கிராம நிர்வாக அதிகாரி சதிஸ்குமார் கறம்பக்குடி போலீசில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story