மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி தற்கொலை + "||" + School student commits suicide

பள்ளி மாணவி தற்கொலை

பள்ளி மாணவி தற்கொலை
பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்
கீரமங்கலம்
 கீரமங்கலம் அருகே  உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகள் மணிமேகலை (வயது 13). தர்மலிங்கம் கோவையில் வேலை பார்த்து வருவதால் மணிமேகலை தனது தாத்தா வேலாயுதம் பாட்டி நாகமுத்து சித்தப்பா செந்தில் வீட்டில் தங்கி இருந்து கொத்தமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூஜை அறையில் தூக்குப்போட்டு மணிமேகலை பிணமாக தொங்கியுள்ளார். வெளியில் சென்றிருந்த செந்தில் மற்றும் சித்தி வீடு திரும்பிய போது மணிமேகலை தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவி மணிமேகலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ன காரணத்துக்காக மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி மாணவி தற்கொலை
பள்ளி மாணவி தற்கொலை
2. பள்ளி மாணவி தற்கொலை
பள்ளி மாணவி தற்கொலை
3. பள்ளி மாணவி தற்கொலை
பள்ளி மாணவி தற்கொலை