வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது


வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2021 2:22 AM IST (Updated: 11 Aug 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

அறந்தாங்கி
அறந்தாங்கி எழில் நகர் 6-ம் வீதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 24). இவர் நேற்று அறந்தாங்கி அரசு ஆண்கள் பள்ளி அருகே தனது நண்பர்களுடன் அரட்டை அடித்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அருகே நின்ற எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சத்தியராஜ், வீரமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் ஆகியோர் அவர்களை தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் அசோக்குமாரின் தலையின் வலது பக்கத்தில் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அசோக்குமார் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீசார் சுரேஷ், சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story