நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியதால் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கையை அறுத்து தற்கொலை முயற்சி


நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியதால் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கையை அறுத்து தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 11 Aug 2021 3:40 AM IST (Updated: 11 Aug 2021 3:40 AM IST)
t-max-icont-min-icon

நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியதால் லக்கம்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பிளேடால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொளத்தூர்:
நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியதால் லக்கம்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பிளேடால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லக்கம்பட்டி ஊராட்சி
கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது லக்கம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த நாகராஜ் உள்ளார். துணைத்தலைவராக இருப்பவர் நதியா (வயது 28). 
இந்த நிலையில் நேற்று லக்கம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார் கூட்டத்தில் 10 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நதியா, தனது கணவரின் பேச்சை கேட்டுக்கொண்டு திட்டப் பணிகளில் தலையிடுவதாகவும், பணி முடிந்த ஒப்பந்த பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்கு காசோலை வழங்குவதற்கு காசோலைகளில் கையொப்பமிட மறுப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரமுடிவு செய்யப்பட்டது. 
தற்கொலை முயற்சி
இதனால் அதிர்ச்சி அடைந்த துணைத்தலைவர் நதியா தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.  உடனே அவரை சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் வீடு திரும்பினார். 
இதனிடையே ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் உள்பட 8 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் துணைத்தலைவர் நதியா மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றினர். பின்னர் கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முத்துசாமியிடம், தீர்மான நகலை அளித்தனர். 
தன்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியதால், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story