சேலம் மண்டலத்தில் 28 கூட்டுறவு சார்பதிவாளர்கள் பணி இடமாற்றம்


சேலம் மண்டலத்தில் 28 கூட்டுறவு சார்பதிவாளர்கள் பணி இடமாற்றம்
x
தினத்தந்தி 11 Aug 2021 4:11 AM IST (Updated: 11 Aug 2021 4:11 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மண்டலத்தில் 28 கூட்டுறவு சார்பதிவாளர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சேலம்:
சேலம் மண்டலத்தில் கூட்டுறவுத்துறையில் 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்த சார்பதிவாளர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, கெங்கவல்லியில் கூட்டுறவு சார்பதிவாளராக பணியாற்றிய சக்திவேல் பெத்தநாயக்கன்பாளையத்துக்கும், அங்கு பணியாற்றிய வசந்தன் கெங்கவல்லிக்கும், எடப்பாடி பொதுவினியோக திட்ட சார்பதிவாளராக பணியாற்றிய பூபதி சரக துணை பதிவாளர் அலுவலகத்துக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இவர்கள் உள்பட 28 சார்பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் பிறப்பித்துள்ளார்.

Next Story