சரக்கு ஆட்டோவை திருடிய வாலிபர் கைது


சரக்கு ஆட்டோவை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2021 4:20 AM IST (Updated: 11 Aug 2021 4:20 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு ஆட்டோவை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வாழப்பாடி:
வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் சரத்குமார் (வயது 24). இவர், தனது சித்தப்பா சரவணன் என்பவருக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி அதே பகுதியில் உள்ள தனது மற்றொரு சித்தப்பாவான காந்தி என்பவரது வீட்டின் முன் சரக்கு ஆட்டோவை நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் அந்த ஆட்டோவை காணவில்லை. யாரோ திருடிச்சென்று விட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சரக்கு ஆட்டோவை திருடியதாக நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை சேர்ந்த செந்தமிழ்வாணன் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story