பாலக்குறிச்சியில் மொபட்டில் வைத்திருந்த ரூ.1¾ லட்சம் திருட்டு
பாலக்குறிச்சியில் மொபட்டில் வைத்திருந்த ரூ.1¾ லட்சம் திருட்டு போனது.
பாலக்குறிச்சியில்
மொபட்டில் வைத்திருந்த ரூ.1 ¾ லட்சம் திருட்டு
துவரங்குறிச்சி,
வளநாடு அருகே உள்ள வாடிப்பட்யைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (வயது 60). இவர் தனக்கு சொந்தமான 7½ பவுன் நகையை பாலக்குறிச்சியில் உள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்து ரூ.1.87 லட்சம் கடன் பெற்றார். அந்த தொகையை தனது மொபட்டில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு, அருகில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக வளநாடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story