கோவையில் கொரோனாவுக்கு 5 பேர் பலி


கோவையில் கொரோனாவுக்கு 5 பேர் பலி
x
தினத்தந்தி 11 Aug 2021 7:54 AM IST (Updated: 11 Aug 2021 7:56 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கொரோனா தொற்றுக்கு நேற்று 5 பேர் உயிரிழந்தனர். புதிதாக 224 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கோவை,

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக குறைந்து காணப்படுகிறது. கடந்த 8-ந் தேதி 241 பேருக்கும், நேற்று முன்தினம் 235 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியல்படி கோவையில் நேற்று புதிதாக 224 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

 இவர்களுடன் சேர்த்து இதுவரை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 31 ஆயிரத்து 633 ஆக உயர்ந்து உள்ளது.

இதுதவிர கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது ஆண், 53 வயது பெண், 56 வயது பெண், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது ஆண், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 77 வயது ஆண் என நேற்று 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,199 ஆக உயர்ந்து உள்ளது.

கோவையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 217 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை தொற்றில் இருந்து 2 லட்சத்து 27 ஆயிரத்து 200 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 2,234 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story