சாமி தரிசனத்துக்கு தடை விதித்த நிலையிலும் திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


சாமி தரிசனத்துக்கு தடை விதித்த நிலையிலும் திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 11 Aug 2021 12:47 PM IST (Updated: 11 Aug 2021 12:47 PM IST)
t-max-icont-min-icon

சாமி தரிசனத்துக்கு தடை விதித்த நிலையிலும் திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். சாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லாததால் பக்தர்கள் வாசலில் நின்று வழிபட்டனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நேற்றும், இன்றும் தடை விதித்திருந்தார்.

இதனையும் மீறி நேற்று பக்தர்கள் அதிக அளவில் திருத்தணி முருகன் கோவிலில் குவிந்தனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். சாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லாததால் பக்தர்கள் வாசலில் நின்று வழிபட்டனர். பல பக்தர்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் வருகை தந்தது பலரை அச்சப்பட வைத்தது.

Next Story