பூந்தமல்லியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; மதபோதகர் சாவு


பூந்தமல்லியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; மதபோதகர் சாவு
x
தினத்தந்தி 11 Aug 2021 2:41 PM IST (Updated: 11 Aug 2021 2:41 PM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கிறிஸ்தவ மதபோதகர் பலியானார்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி, கீழ்மா நகர் பகுதியை சேர்ந்தவர் சாம் பிரபு (வயது 59). கிறிஸ்தவ மதபோதகராக இருந்து வந்தார். இவர் ஜோன் என்ற வாலிபரை வளர்ப்பு மகனாக வளர்த்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஜோனை சேர்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் இருவரும் சென்று கொண்டிருந்தனர். பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்ததில், சாம் பிரபுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள வாகனஓட்டிகள் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த சாம்பிரபு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சாம்பிரபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஜோன் லேசான காயம் ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் வெங்கடேசன் (33), என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story