குலசேகரன்பட்டினத்தில் மதுபாட்டில் வைத்திருந்தவர் கைது


குலசேகரன்பட்டினத்தில் மதுபாட்டில் வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2021 4:47 PM IST (Updated: 11 Aug 2021 4:47 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் மதுபாட்டில் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் உடன்குடி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது சமத்துவபுரம் விலக்கு அருகே மணப்பாடு சுனாமி நகர் உதயகுமார் மகன் ஜான்பால் (வயது 34) என்பவர் அரசின் தடை உத்தரவை மீறி எவ்வித அரசு அனுமதி இல்லாமல் விற்பனை செய்யும் நோக்கத்தில் மதுபான பாட்டில்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story