ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு


ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
x
தினத்தந்தி 11 Aug 2021 7:43 PM IST (Updated: 11 Aug 2021 7:43 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென உயிரிழந்தார்.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சந்திரிகா (வயது 55), கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இறந்த சந்திரிகாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

இறந்த சந்திரிகாவின் உடலுக்கு ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, முத்துக்குமார், ஷாகின் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Next Story