சாமல்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சாமல்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2021 9:26 PM IST (Updated: 11 Aug 2021 9:26 PM IST)
t-max-icont-min-icon

சாமல்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லாவி:
ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி ரெயில் நிலையம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பறிக்கப்பட்ட ரெயில் கட்டண சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். ரெயில் நிலையங்களில் மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகளை மீண்டும் இயக்க வேண்டும். அனைத்து ரெயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்டிகளை இணைக்க வேண்டும். நடைமேடை கட்டணத்தை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story