மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 11 Aug 2021 9:32 PM IST (Updated: 11 Aug 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது


சின்னசேலம்

சின்னசேலம் அண்ணாநகர் பஸ் நிறுத்தம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் வழிமறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த உடையார்பாளையம், காந்திரோடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் சூரத்(வயது 19), ஆத்தூர், நரசிங்கபுரம், நபிகள் நாயகம் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் கார்த்திகேயன்(22) என்பதும், இருவரும் கடந்த 3-ந் தேதி சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், இந்திராநகர் பகுதியில் மெக்கானிக் கடை முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சூரத், கார்த்திகேயன் இருவரையும் கைது செய்த போலீசார் அவா்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story