ஜாமீனில் வெளிவந்த வாலிபருக்கு கத்திக்குத்து


ஜாமீனில் வெளிவந்த வாலிபருக்கு கத்திக்குத்து
x
ஜாமீனில் வெளிவந்த வாலிபருக்கு கத்திக்குத்து
தினத்தந்தி 11 Aug 2021 9:41 PM IST (Updated: 11 Aug 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

ஜாமீனில் வெளிவந்த வாலிபருக்கு கத்திக்குத்து

கோவை

கோவை காட்டூர் ராம்நகரில் கடந்த ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் பிஜூ என்பவர், அவரது ஜூஸ் கடை முன்பு ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் ரத்தினபுரி சங்கனூர் காந்திநகரை சேர்ந்த அருண்குமார் (வயது32), உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். 

அருண்குமார் தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். சம்பவத்தன்று இவர் கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஜெயசிம்மபுரத்தில் உள்ள தன்னுடைய நண்பர் சிவக்குமார் என்பவரை சந்திக்க சென்றார்.

இருவரும் அவர்கள் வீட்டருகே நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.  இந்த நிலையில் அங்கு வந்த 3 பேர் அருண்குமாரிடம் தகராறு செய்தனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆனது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து அருண்குமாரை கத்தியால் குத்தினர். 

இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்,பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கோவையை சேர்ந்த மோசஸ் உள்பட 3 பேரை தேடி வருகிறார்கள்.

Next Story