திருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
தியாகதுருகம் அருகே திருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே உள்ள வடதொரசலூர் பி.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்பாஷா மனைவி நூர்ஜஹான்(வயது 44). இவரது மகன் ஜாகீர் உசேன்(28) மும்பையில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கும் தியாகதுருகம் அருகே உள்ள பீளமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆயிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. ஜாகீர் உசேன் மும்பையில் திருமணம் ஆன ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து கடந்த 1-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அவர் மீண்டும் 8-ந் தேதி தேதி வீடு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜாகீர்உசேன் வராண்டாவில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்து அவரது வீட்டுக்கு வந்த உறவினர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தியாகதுருகம் போலீசார் ஜாகீர் உசேன் உடலை தூக்கில் இருந்து இறக்கி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஜாகீர் உசேனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story