விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்,
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மின்சார சட்ட திருத்த மசோதா 2021-ஐ ஒன்றிய அரசு தாக்கல் செய்ய முடிவெடுத்ததை கண்டித்து இந்தியா முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் ஆகஸ்டு 10-ந் தேதியன்று வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஒன்றிய அரசு, மின்சார சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய விரும்பாத காரணத்தால் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நாடு முழுவதும் நடத்த இருந்த வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனை விளக்கி விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளன செயலாளர் குப்புசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் புருஷோத்தமன், சேகர், தொ.மு.ச. நிர்வாகிகள் சண்முகம், வேல்முருகன் ஆகியோர், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் பொறியாளர் சங்க நிர்வாகிகள் சிவசங்கரன், ரவீந்திரன், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க நிர்வாகிகள் சிவக்குமார், பெரியசாமி, மின்சார அண்ணா தொழிற்சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பெடரேசன் தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story